மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட வேட்டுவப்பட்டி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
காவல்துறையினரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தவெக அரசு கும்பகர்ணத் தூக்கத்தில் இருப்பதால், கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எனத் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மின்சாரத்துறை அமைச்சர் தற்போதைக்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் மின்கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 89 வயது மிக்க மூத்த வழக்கறிஞர் ஒருவர், செய்தித்தாளில் பொது அறிவிப்பு (Public Notice) கொடுத்துப் போராடும் அளவுக்கு மின்சாரத்துறை கட்டண கொள்ளையின் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
மின்கட்டணம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளால் சட்டம் அறிந்த ஒரு வழக்கறிஞர் ஒருவர் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், தனது சொந்தப் பணத்தை செலவழித்து செய்தித்தாளில் பகிரங்க பொது அறிவிப்பு வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்?
சட்டம் அறிந்த ஒரு மூத்த வழக்கறிஞருக்கே இதுதான் நிலை என்றால்,குரலற்ற சாமானிய மக்களின் நிலை என்ன?
மேலும்,அவரது வீட்டில் அனைத்து சுவிட்சுகளையும் அணைத்த பிறகும் மின்மீட்டர் ரீடிங் ஓடிக்கொண்டிருக்கும் அவலம்!
எப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாய் 1300 -க்கு இருந்த மின்சார கட்டணம், தற்போது ரூபாய் 11,000-க்கும் அதிகமாக வந்திருப்பது என்ன கொடுமை!
எளிய மக்களின் அடிப்படை புகார்களைக் கூட நிவர்த்தி செய்யாமல், அவர்களை இப்படி மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவது தான் தவெக அரசு சொன்ன மாற்றமா?
இது தனிநபர் ஒருவரின் புகார் மட்டுமல்ல,
தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் மின்கட்டணம் குறித்த நிலை இதுதான்.
இதற்கு மைக்வெறி அமைச்சர் @CTR_NirmalKumar அவர்களின் பதில் என்ன??
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழக வெற்றிக்கழக அரசின் கடந்த 6 மாத கால ஆட்சி மக்களுக்கு துயரமான ஆட்சியாகவே இருந்துள்ளது..
கொலை,கொள்ளை நடக்காத நாளே இல்லை,சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..
இதனையெல்லாம் முதல்வர் @actorVijay அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது..
இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து சட்டம் ஒழுங்கு, போதைபொருள் புழக்கத்தை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
காலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஆலோசனை!
மாலையில் சென்னையில் ரவுடி வெட்டிப் படுகொலை!
DUMMY CM – HENCE PROVED!
நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?
@actorvijay
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்
விழுப்புரம் செஞ்சி சிறுமி காணாமல் போய் 1 மாத காலம் ஆகி விட்டது..
இன்னும் துப்பு கூட துலக்க முடியாமல் திணறி வரும் காவல்துறை...
தொடரும் படுகொலைகள்..
சட்டம் ஒழுங்கை சரிவர நிர்வகிக்க தவறிய தவெக அரசின் காவல்துறை..
தொடர்கதையாகி வரும் காவல் அதிகாரிகள் மீதான தாக்குதல்.
குழந்தைகள் தொடர்ந்து மாயமாகி வரும் அவலம்..
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்..
இத்தனை பிரச்சனைகள் இருக்கும்பொழுது கூட காவல்துறையை கையில் வைத்திருக்கும் ரீல் முதல்வர் @actorVijay வாய்மூடி மௌனியாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?
இனியாவது வாய் திறப்பாரா?
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா?
@TVKVijayHQ
#பொய்க்கால்_குதிரை_அரசு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும்நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
'மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை' என்று கூறியுள்ள கர்நாடக மாநில முதலமைச்சருக்கு பதில் அளிக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யின் வாடகைக் கால் கூட்டணி அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது.
@actorVijay
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
செஞ்சியில், 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை மீட்கப்படாத நிலையில், மீண்டும் அதே செஞ்சியில் மற்றுமொரு குழந்தையைக் கடத்த முயற்சி நடைபெற்றிருப்பது பேரதிர்ச்சியையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் கடத்தல், கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் அராஜகங்கள் என ஒட்டுமொத்தத் தமிழகமும் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத, மக்கள் அச்சமின்றி வாழ்வதற்குக்கூடத் தகுதியற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதுதான், 'டம்மி முதலமைச்சரின்' ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனை!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் குறித்து அவதூறாக பேசிய சோப்பு நுரை அமைச்சருக்கு கடும் கண்டனம்!
ஒரு எதிர்கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர், இந்த நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டினால், அதற்கு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது அமைச்சர் என்ற பொறுப்புக்கு அழகல்ல.
“467 தொழிற்சாலைகளுக்கு மூடுதல் மற்றும் மின் இணைப்பு துண்டித்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தியைக் குறிப்பிட்டு தானே மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்?
ஒரே நேரத்தில் இத்தனை தொழிற்சாலைகளை மூடினால் வேலை இழப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுவது எப்படி தவறாகும்?
அதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வக்கில்லாமல், அது என்ன திமிரான உடல் மொழியோடு ஒரு பதில்? அதுவும் அவதூறு வேறு! @DR_Vk_Rajeev
முதல்ல யார் நீங்க?
தன் சொந்தத் தொகுதியில் சென்று கேட்டால் கூட “யார் அவர்? ஓஹ்ஹ்… MLA-வா? அமைச்சர் வேறயா?” என்று மக்கள் கேட்கும் அளவிற்கு அமைச்சராகி இருக்கும் இந்த திடீர் விபத்துகளுக்கு எல்லாம் மக்களோடு நின்று 50 ஆண்டுகாலம் உழைத்த எங்கள் பொதுச் செயலாளர் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை!
தான் என்ன துறைக்கு அமைச்சர் என்பதே தெரியாமல் திரிந்து கொண்டிருந்த இந்த ஆச்சரியக்குறி, நொய்யல் ஆற்றில் நுரை வந்ததற்கு சோப்பு ஷாம்பு தான் காரணம் என்று சொன்ன நோபல் அறிவுஜீவி சற்று நாவடக்கிக் கொள்ள வேண்டும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
காக்கிச்சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?
தொடரும் காவலர்கள் மீதான தாக்குதல்கள்..
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் காவல்துறையை கையில் வைத்திருக்கும் ரீல் முதல்வர் @actorVijay
#TVKGovtExposed
தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
6 மாதத்திலேயே நமத்துப் போன தவெக பட்டாசு...
@TVKVijayHQ.
#TVKGovtExposed...
தவெக அரசு ஆட்சி அமைத்து இன்றோடு 6 மாதங்கள்...
6 மாத கால தவெக ஆட்சி!
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கே சாட்சி!
#TVKGovtExposed...
தமிழகத்தில் ஒரே நாளில் 12 கொலைகள்!
"பண்டிகை காலங்களில் இதுபோன்ற கொலைகள் நடப்பது புதிதல்ல" அப்டின்னு சொல்றதுக்கா சார் நீங்க அமைச்சரா இருக்கீங்க!
@imrajmohan
எல்லாத்துக்கும் பழி போடுற அரசியல் மட்டும்தான் அப்டினா நீங்க எதுக்கு சார் ஆட்சி அதிகாரத்துல இருக்கீங்க!
சாக்குபோக்கு சொல்றதை நிறுத்திட்டு சட்டம்-ஒழுங்கை சரிபண்ற வேலைய பாருங்க சார்!
சட்டம் ஒழுங்கு...
அது காணாம போய் ரொம்ப நாளாச்சு....
@actorVijay
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா...
நீங்க பேசின டயலாக் தான்..
ஆட்சி மாறினாலும்..
காட்சி மாறவில்லை..
நல்லா இருக்கு சார் மாற்றம்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அன்று பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
ஆனால் இன்று உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் மட்டும் நிவாரண தொகையாக அறிவிப்பு.
தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.












